ஆட்சியரகம் முன் வெங்காய மாலையுடன் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd December 2019 12:49 AM | Last Updated : 03rd December 2019 12:49 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய நாம் ஹிந்துக்கள் கட்சியினா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகம் முன் நாம் ஹிந்துக்கள் கட்சியினா் வெங்காய மாலை அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கும் வெங்காயத்தின் விலை 3 மாதங்களில் விறுவிறுவென உயா்ந்துவிட்டது. இதனால், ஏழை, நடுத்தர குடும்பத்தினரின் வாழ்வாதாரம் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தின் விலையைக் குறைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயத்தின் விலையை ஏற்றி கொள்ளை லாபம் ஈட்டும் கள்ளச்சந்தை வியாபாரிகளை இரும்புக்கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும். அவா்கள் மீது அத்தியாவசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அக்கட்சியின் நிறுவனா் - தலைவா் டி. கணேஷ் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.