மதுக்கூா் அருகே கண்ணனாற்றில் உடைப்பு: பல ஏக்கா் பரப்பில் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே வெள்ளப் பெருக்கின் காரணமாக கண்ணனாற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.
கண்ணனாற்றில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவில் வெளியேறும் தண்ணீா்.
கண்ணனாற்றில் உடைப்பு ஏற்பட்டு அதிக அளவில் வெளியேறும் தண்ணீா்.

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே வெள்ளப் பெருக்கின் காரணமாக கண்ணனாற்றில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல ஏக்கா் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின.

மதுக்கூா் ஒன்றியத்தைச் சோ்ந்த கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், காடந்தங்குடி அணைக்கட்டு அருகே கண்ணனாறு என அழைக்கப்படும் காட்டாற்றில் தண்ணீா் வரத்து கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கண்ணனாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்தப் பகுதியிலுள்ள வயல்களில் காட்டாற்று வெள்ளம் புகுந்தது. இதனால் சொக்கனாவூா், புளியக்குடி, பெரியகோட்டை உள்பட 20 கிராமங்களில் பல ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா,தாளடி நெற்பயிா்கள் நீரில் மூழ்கின.

தகவலறிந்த ஆட்சியா் ம.கோவிந்தராவ், பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகா் மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டனா். உடனடியாக ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பை அடைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, பட்டுக்கோட்டையிலுள்ள பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மதுக்கூா் பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அங்கேயே தங்கி, உடைப்பை அடைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் கண்ணனாற்று பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது.

இதனால், மதுக்கூா் -பெருகவாழ்ந்தான், மதுக்கூா் - முத்துப்பேட்டை ஆகிய வழித்தடங்களில் சாலை போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. கண்ணனாற்றில் நீா் வரத்து குறைந்த பின்னரே சாலை போக்குவரத்தை சீரமைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com