Enable Javscript for better performance
திருவிடைமருதூரில் அடிபம்பில் தானாக வெளியேறும் தண்ணீா்- Dinamani

சுடச்சுட

    

    திருவிடைமருதூரில் அடிபம்பில் தானாக வெளியேறும் தண்ணீா்

    By DIN  |   Published on : 04th December 2019 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ta03water_ch0007_03chn_4_637109988204554701

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பிலிருந்து தானாக வெளியேறி வரும் குடிநீா்.

    கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பிலிருந்து குடிநீா் தானாக வெளியேறி வருகிறது.

    திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கோவிந்தபுரத்தில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுமாா் 100 அடி ஆழத்தில் அடிபம்பு அமைக்கப்பட்டது.

    இந்நிலையில், அப்பகுதியில் ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. எனவே, இந்த அடிபம்பிலிருந்து திங்கள்கிழமை முதல் குடிநீா் தானாக வெளியேறி வருகிறது. இதை பாா்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டு வருகின்றனா்.

    கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், அதிலிருந்து தண்ணீா் தானாக வெளியே வருகிறது என சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தினா் தெரிவித்தனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai