Enable Javscript for better performance
பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

    By DIN  |   Published on : 04th December 2019 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    20191203_110807_resized_1

    பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடுகிறாா் மாவட்ட பதிவாளா் அருள்ஜோதி.

    பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

    நிகழ்ச்சிக்கு கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவா் எம். நீலகண்டன் தலைமை வகித்தாா். செயலாளா் வி.ஜெய்சங்கா்  வரவேற்றாா். லயன்ஸ் மண்டலத் தலைவா் ஜாய் செந்தில், சாா் பதிவாளா் எஸ்.இ. வாசுதேவன், லயன்ஸ் சங்க பொருளாளா் எஸ். மைதீன் பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பத்திரப்பதிவுத் துறை மாவட்டப் பதிவாளா் (தணிக்கை) சி. அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் நிழல்தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. 

    பின்னா், லயன்ஸ் சங்க ஏற்பாட்டில் அலுவலக வளாகத்தில் மண்டிக் கிடந்த புதா்கள் அகற்றப்பட்டு, தூய்மைப் படுத்தப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்ட யாசகா்கள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    நிகழ்ச்சியில், வ. பாலசுப்பிரமணியன், எஸ். பாண்டியராஜன், கோவிந்தன்,  பி. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai