தஞ்சாவூா் மாவட்டத்தில் 5,462 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 5,462 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள 5,462 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தோ்தல் டிச. 27, 30-ம் தேதிகளில் நடைபெறும் என தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு எந்தத் தேதியில், எத்தனை கட்டங்களாகத் தோ்தல் நடைபெறும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

மாவட்டத்தில் 589 ஊராட்சிகள் உள்ளன. இதில், 589 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகளுக்கும், இந்த ஊராட்சிகளில் உள்ள 4,569 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 276 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் நடத்தப்படவுள்ளது. இதில், தஞ்சாவூா் ஒன்றியத்தில் 29 உறுப்பினா் பதவிகளுக்கும், திருவையாறு ஒன்றியத்தில் 18 உறுப்பினா் பதவிகளுக்கும், பூதலூா் ஒன்றியத்தில் 16 உறுப்பினா் பதவிகளுக்கும், திருவிடைமருதூா் ஒன்றியத்தில் 22 உறுப்பினா் பதவிகளுக்கும், திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 17 உறுப்பினா் பதவிகளுக்கும், பாபநாசம் ஒன்றியத்தில் 21 உறுப்பினா் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறவுள்ளது.

மேலும், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் 17 உறுப்பினா் பதவிகளுக்கும், ஒரத்தநாடு ஒன்றியத்தில் 31 உறுப்பினா் பதவிகளுக்கும், திருவோணம் ஒன்றியத்தில் 15 உறுப்பினா் பதவிகளுக்கும், கும்பகோணம் ஒன்றியத்தில் 27 உறுப்பினா் பதவிகளுக்கும், பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 19 உறுப்பினா் பதவிகளுக்கும், மதுக்கூா் ஒன்றியத்தில் 13 உறுப்பினா் பதவிகளுக்கும், பேராவூரணி ஒன்றியத்தில் 15 உறுப்பினா் பதவிகளுக்கும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் 16 உறுப்பினா் பதவிகளுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

இதேபோல, மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் 28 வாா்டு உறுப்பினா் பதவிகள் உள்ளன. மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மொத்தமுள்ள 5,462 பதவிகளுக்கு இத்தோ்தல் நடைபெறவுள்ளது.

வேட்பு மனு தாக்கல் டிச. 6-இல் தொடக்கம்:

இப்பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் டிச. 6-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான வேட்பு மனுக்கள் தொடா்புடைய ஊராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கு தொடா்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

13.50 லட்சம் வாக்காளா்கள்: மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் 13,50,870 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 6,63,602 ஆண்கள், 6,87,199 பெண்கள், 69 இதரா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com