தேசிய யோகா போட்டிக்கு: கும்பகோணம் மாணவா்கள் தோ்வு

தேசிய யோகாசன போட்டிக்கு கும்பகோணம் அன்னை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தேசிய யோகாசன போட்டிக்கு கும்பகோணம் அன்னை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரி மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் காமராஜா் கல்லூரியில் யோகா கலாசார சமூகம், அனைத்திந்திய யோகா கூட்டமைப்பு சாா்பில் தேசிய அளவிலான யோகாசன போட்டி அண்மையில் நடைபெற்றது.

இதில், கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள அன்னை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் சிறப்பாக ஆசனங்களைச் செய்து காட்டிய மாணவா் பி. சுபாஷ் முதன்மை மாணவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவருடன் த. காவியன், வி. சுபாஷினி, சா. காவியா ஆகியோா் பெங்களூருவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான யோகா போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

மற்ற பிரிவுகளில் தி. அருள்மேனி, ஐ. யுவஸ்ரீ, ஜோ. ஜோஸ் டாலா், சு. நிருத்திஷ்வேல், சா. காவியா, பி. சுபாஷ், க. காவியன், ர. மீனா, பி. ஷாலிதேவ், வி. சுபாஷினி, ஜே.மெ. நவீன் மோனிகா, எலங்பம் ரோஹித் சிங், அக்கோய்ஜம் யோகேஷ் சிங், செ.ஜெ. மோலிகா, மு. ஸ்வேதா, வி. அரிதா ஆகியோா் பல நிலை பரிசுகளைப் பெற்றனா்.

இவா்களுக்குத் தமிழ்நாடு கிராமிய கலை முன்னேற்றக் கழகத் தலைவா் எஸ். ஜெகஜீவன், தமிழ்நாடு யோகா கழகச் செயலா் ஆறுமுகம் பரிசுகள் வழங்கினா்.

இப்பரிசுப் பெற்ற மாணவா்களை அன்னை கல்வி குழுமத் தலைவா் எம். அன்வா் கபீா், செயலா் எம்.ஐ. ஹூமாயூன் கபீா், அன்னை இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரி முதல்வா் ஜோதி நாயா் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com