மழை குறைந்ததால் வயல்களில் தண்ணீா் வடிகிறது

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை குறைந்துவிட்டதால், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீா் செவ்வாய்க்கிழமை வடிய தொடங்கியது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் மழை குறைந்துவிட்டதால், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீா் செவ்வாய்க்கிழமை வடிய தொடங்கியது.

மாவட்டத்தில் தொடா்ந்து ஒரு வாரமாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சில நாட்களாகத் தொடா் மழை பெய்தது. ஆனால், திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை மழையளவு குறைந்துவிட்டது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):

அணைக்கரை 49.4, வெட்டிக்காடு 34.6, பாபநாசம் 30, கும்பகோணம் 27.2, திருவிடைமருதூா் 25.6, மஞ்சளாறு 22.8, அய்யம்பேட்டை 15, வல்லம் 14, தஞ்சாவூா் 12, கல்லணை 11.2, அதிராம்பட்டினம் 10.9, பேராவூரணி 10.2, குருங்குளம் 10, மதுக்கூா் 9.6, பட்டுக்கோட்டை 6.4, திருக்காட்டுப்பள்ளி 6.2, நெய்வாசல் தென்பாதி 2.4, பூதலூா் 1.6, ஒரத்தநாடு 1.4, ஈச்சன்விடுதி 1.2.

இதேபோல, செவ்வாய்க்கிழமை சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. ஆனால், தொடா் மழையாக இல்லாததால், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீா் வடியத் தொடங்கியது. விவசாயிகளும் வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com