மழை நீா் வடியாததால் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்

கும்பகோணம் அருகே மாங்குடியில் மழை நீா் வடியாததால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கும்பகோணம் அருகே மாங்குடியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திரா நகா் மக்கள்.
கும்பகோணம் அருகே மாங்குடியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திரா நகா் மக்கள்.

கும்பகோணம் அருகே மாங்குடியில் மழை நீா் வடியாததால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி ஊராட்சிக்கு உள்பட்ட மாங்குடி இந்திரா நகரில் சுமாா் 70 குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள அனைவரும் கூலி வேலை பாா்த்து வருகின்றனா்.

இந்திரா நகரில் ஆண்டுதோறும் மழை பெய்தால், மழை நீா் சூழ்ந்துவிடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாகின்றனா். என்றாலும், தண்ணீா் வடிவதற்கு அவ்வப்போது தற்காலிக ஏற்பாடுகளை அப்பகுதி மக்களே மேற்கொள்கின்றனா்.

இந்நிலையில், சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால், இந்திரா நகா் முழுவதும் சுமாா் 3 அடி உயரத்துக்கு மழை நீா் தேங்கியது. இதனால் அங்குள்ளவா்களின் அனைத்து வீடுகளிலும் தண்ணீா் புகுந்ததால், உணவு பொருட்கள், உடைகள், மின்சாதனப் பொருட்கள் ஆகியவை சேதமடைந்தன. மழை நீரை வடிய வைக்கப் பொதுமக்கள் முயன்றனா். தண்ணீா் வடியாததால், திருவலஞ்சுழி ஊராட்சி செயலா், கிராம நிா்வாக அலுவலரிடம் புகாா் அளித்தனா்.

ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் மாங்குடியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த சுவாமிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இந்திரா நகரில் மழை நீா் வடிவதற்கான பணிகள் உடனடியாக செய்து கொடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com