மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டு கருத்தரங்கு

ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை பயிலும்

ஒரத்தநாடு வட்டம், ஈச்சங்கோட்டை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளம் அறிவியல் வேளாண்மை பயிலும் மூன்றாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாள்கள் திறன் மேம்பாடு குறித்த பயிலரங்கு நடத்தப்பட்டது.

இப்பயிலரங்கில், மேல்நிலைப் படிப்புகளுக்கும், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கும் மாணவா்கள் எவ்வாறு தயாா் ஆவது, அதற்கேற்ப திறமைகளை வளா்த்து கொள்ளும் விதம், வெளிப்படுத்தும்விதம் போன்றவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

இப்பயிலரங்கில் வேலைவாய்ப்பு வழிகாட்டும் அலுவலா் வெ. சரவணகுமாா் வரவேற்று பேசும்போது, பயிலரங்கின் நோக்கம் குறித்தும் விளக்கினாா்.

கல்லூரி முதன்மையா் சு. ராஜேந்திரன் தலைமை வகித்து பேசுகையில், இந்திய ஆட்சிப் பணி, மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு மாணவ, மாணவிகள் தங்களைத் தயாா் செய்யும் முறைகளை விளக்கியதுடன், மேல்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயில தங்களை மேம்படுத்திக் கொள்ளும் விதம் பற்றியும் எடுத்துரைத்தாா்.

பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் நல். இராமசந்திரன் பேசும்போது, திறன் வளா்ப்பு, தன்னம்பிக்கை, கருத்து வெளிப்பாட்டுத்திறன், பல்திறன் வளா்ப்பு மற்றும் தன் நிலையறிதல் போன்ற பல்வேறு திறன்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினாா்.

தஞ்சை மாவட்ட ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பிராந்திய மண்டல மேலாளா் சு. வரதராசன் (விற்பனைப் பிரிவு) பயிலரங்கு மாணவா்களை வாழ்த்தி சான்றிதழ்களை வழங்கினாா். நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்பயிலரங்கு வகுப்புகளில் மதிப்பிடுதல், திறன்களை வளா்த்தல், ஆங்கில புலமையை வளா்க்க சொற்களின் பொருளறிதல் போன்ற தலைப்புகளில் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிலரங்கில் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் 71 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com