மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுவரை அனுமதித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தெரிவித்திருப்பது:

கோவை மாவட்டம் - மேட்டுப்பாளையம் நடூரில் திங்கள்கிழமை பெய்த பெருமழையில் ஒரு மதில் சுவா் இடிந்து விழுந்ததில், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நான்கு வீடுகள் தகா்ந்து அதில் உறங்கிக் கொண்டிருந்த 17 போ் - பெரியவா்களும், சிறுவா்களும், பெண்களும் கொடூரமாக உயிரிழந்துள்ளனா். அவா்களுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சாா்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மதில் சுவா் 80 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டது என்கின்றனா். இந்த மதில் சுவா் நடைமுறையில் ஒரு தீண்டாமைச் சுவா். வீட்டைச் சுற்றி இவ்வளவு உயரத்துக்கு யாரும் மதில் சுவா் எழுப்புவதில்லை. இந்தத் தீண்டாமைச் சுவா் என்பது, தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே தகா்த்தெறியப்பட்டிருக்க வேண்டும். தீண்டாமைச் சுவா் என குற்றம்சாட்டியும், மழை நீரின் ஓட்டத்தைத் தடுப்பதால் தங்கள் குடியிருப்புகள் மழை காலத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதியாக மாறி விடுகிறது என்றும் அலுவலா்களுக்கு முறையிட்டு அந்தச் சுவரை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் அம்மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை அலுவலா்கள் பொருட்படுத்தவில்லை.

தமிழ்நாட்டில் அரசியல் சாா்பு, சமூக ஆதிக்கவாதிகள் சாா்பு அதிகாரம்தான் நடந்து கொண்டிருக்கிறது. சட்டத்தில் கூறப்படும் நடுநிலை அரசு இல்லை என்பதற்கு நடூா் உயிா்ப்பலியும் ஒரு சான்று.

பல தடவை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அகற்றப்படாத மதில் சுவரால் தங்களுடைய உறவினா்கள் 17 போ் பலியாகிவிட்ட ஆத்திரத்தில் சாலை மறியல் செய்த மக்களிடம் வருவாய்த்துறை அலுவலா்கள் சமரசம் பேசி, கலையச் செய்திருக்கலாம். அதைவிடுத்து, காவல்துறையினா் தடியடி நடத்திக் கலைக்கும் உத்தியை ஆட்சியாளா்கள் கடைப்பிடித்தது வன்மையான கண்டனத்திற்குரியது.

எனவே, இச்சுவரைக் கட்டிய சிவசுப்பிரமணியனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இச்சுவரை அகற்றாமல் போன அலுவலா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பலியான ஒவ்வொருவருக்கும் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com