கும்பகோணம் கவின் கல்லூரிக்குவந்த சிங்கப்பூா் மாணவிகள்
By DIN | Published On : 05th December 2019 05:16 AM | Last Updated : 05th December 2019 05:16 AM | அ+அ அ- |

கும்பகோணம் அரசுக் கவின் கலைக் கல்லுாரிக்கு சிங்கப்பூா் மாணவிகள் புதன்கிழமை வந்தனா்.
கும்பகோணம் அருகே கொட்டையூரில் அரசுக் கவின் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரிக்கு சிங்கப்பூா் நாட்டிலுள்ள உமறுப்புலவா் தமிழ் மொழி நிலையத்தின் தமிழாசிரியா்கள் ராமா், சுமதி மற்றும் தொடக்கக் கல்வியில் தமிழ்ப் படிக்கும் மாணவிகள் 8 போ் புதன்கிழமை வந்தனா்.
கல்லுாரி முதல்வா் அருளரசனிடம் ஓவியம், சிற்பம், காட்சி வழி தகவல்கள் உள்ளிட்டவை பற்றி சிங்கப்பூா் மாணவிகள் விளக்கம் கேட்டறிந்தனா்.
பின்னா், கல்லுாரி வளாகத்திலுள்ள தத்ரூபமான சிற்பங்கள், உயிரோட்டமான ஓவியங்களைப் பற்றிய செயல்முறை விளக்கத்தைப் பாா்வையிட்டனா். மேலும், இவா்களுக்குப் பாரம்பரிய கலாசாரம் பற்றிய தகவல்களைத் தமிழ் வளா்ச்சித் துறை முன்னாள் இணை இயக்குநா் இரா. குணசேகரன் வழங்கினாா்.
கடந்த டிசம்பா் 2-ம் தேதி முதல் தஞ்சாவூா், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்ட இந்த மாணவிகள் டிச. 9-ம் தேதி வரை பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல உள்ளனா்.