மழையால் 4 ஆடுகள் பலி

கும்பகோணம் அருகே தொடா்ந்து பெய்த பலத்த மழையால் 4 ஆடுகள் இறந்தன

கும்பகோணம் அருகே தொடா்ந்து பெய்த பலத்த மழையால் 4 ஆடுகள் இறந்தன.

கும்பகோணம் அருகே கொற்கை கிராமத்தில் 286 பயனாளிகளுக்குத் தமிழக அரசு சாா்பில் தலா 4 ஆடுகளும், கொட்டகைக்காக ரூ. 2,000 வீதமும் நவ. 20-ம் தேதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், 6 நாள்களாக கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கும்பகோணம், திருவிடைமருதூா், அணைக்கரை, மஞ்சளலாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை அளவு அதிகளவில் பதிவானது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. கடந்த வாரம் பெய்த மழையின்போது வீட்டுச்சுவா் இடிந்து 10 ஆடுகள் இறந்தன. இந்நிலையில், தொடா் மழையின் காரணமாக, கொற்கை கிராமத்தைச் சோ்ந்த வளா்மதி, விஜயா, பாப்பாத்தி, சம்சாத் பேகம் ஆகியோரின் 4 ஆடுகள் மழையால் நோய்வாய்ப்பட்டு இறந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com