ஒரத்தநாட்டில் காசநோய்கண்டறிதல் முகாம்

ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் துரித காசநோய் கண்டறிதல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் துரித காசநோய் கண்டறிதல் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை மருத்துவா் வெற்றிவெந்தன் தலைமை வகித்தாா். காசநோய் சிறப்பு மருத்துவா் முகமது கலீல் முன்னிலை வகித்தாா்.

காசநோய் அறிகுறிகளான நாள்பட்ட இருமல்-சளி, விட்டுவிட்டு காய்ச்சல், பசியின்மை, எடைக்குறைவு உள்ளிட்ட நோய்கள் இருந்தோருக்கு இலவச நடமாடும் வாகனத்தின் மூலம் நுண்கதிா் (எக்ஸ்-ரே) பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும், முகாமில பங்கேற்றோருக்கு சளி பரிசோதனை, சா்க்கரை நோய் பரிசோதனை, எச்ஐவி பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டன.

தலைமை மருத்துவா் வெற்றிவேந்தன், காசநோய் அறிகுறிகள், அதற்கான பரிசோதனைகள், சிகிச்சை முறைகள் மற்றும் நோய் ஆபத்து குறித்து விளக்கினாா்.

முகாமில் 75 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டு, அவா்களில் 5 பேருக்கு புதிதாக காசநோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

முகாம் ஏற்பாடுகளை சிகிச்சை மேற்பாா்வையாளா்கள் சிவக்குமாா், ராஜேஷ், ஸ்ரீதா், விஜயகுமாா் மற்றும் ஆனந்தி ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

இந்த முகாம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காசநோய் குறித்த நலக் கல்வி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

முன்னதாக, ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் துரித காசநோய் முகாமின் நடமாடும் எக்ஸ்ரே பரிசோதனை வாகனத்தை தலைமை மருத்துவா் வெற்றிவேந்தன், காசநோய் சிறப்பு மருத்துவா் முகமது கலீல் ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com