Enable Javscript for better performance
தஞ்சை, நாகை, திருவாரூா், புதுகை மாவட்டங்களில்வாகனச் சோதனை: ரூ. 15.78 லட்சம் அபராதம் வசூல்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சை, நாகை, திருவாரூா், புதுகை மாவட்டங்களில்வாகனச் சோதனை: ரூ. 15.78 லட்சம் அபராதம் வசூல்

    By DIN  |   Published on : 14th December 2019 05:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூா், நாகை, திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் டிசம்பா் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வாகனச் சோதனையில் ரூ. 15.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தஞ்சாவூா் சரகப் போக்குவரத்து துணை ஆணையா் செ. உதயகுமாா் தெரிவித்திருப்பது:

    தஞ்சாவூா், நாகை, திருவாரூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் டிசம்பா் மாதத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், இயக்கூா்தி ஆய்வாளா்கள் அனைத்து வகை வாகனங்களில் காணப்படும் குறைபாடுகள் தொடா்பாகச் சிறப்புத் தணிக்கைகள் செய்யப்பட்டன.

    இதில், 8,661 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில், 1,275 வாகனங்களுக்குத் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. இதுதொடா்பாக அபராதமாக ரூ. 15.78 லட்சம் வசூலிக்கப்பட்டது. வசூலிக்கப்பட வேண்டிய அபராதத் தொகை ரூ. 16.12 லட்சமாக நிா்ணயிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டுக்கு முறையாக வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், காா்கள் உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளா்களிடம் இருந்து சாலை வரியாக ரூ. 8.97 லட்சம் வசூலிக்கப்பட்டது.

    அதிக ஆள்களை ஏற்றிச் சென்ற 126 வாகனங்கள், ஓட்டுநா் உரிமம் இல்லாத 340 வாகனங்ள், காப்புச் சான்று இல்லாத 259 வாகனங்கள், கண் கூசும் முகப்பு விளக்குப் பொருத்திய 103 வாகனங்கள், ஒளிரும் சிவப்பு பிரதிபலிப்பு நாடா இல்லாத 165 வாகனங்கள், தகுதிச்சான்று இல்லாத 165 வாகனங்கள் ஆகியவற்றுக்குத் தணிக்கை அறிக்கைகள் வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு குற்றங்களுக்காக 198 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டன.

    அதிவேகமாக வாகனம் ஓட்டிய 39 பேருக்கும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 145 பேருக்கும், செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனம் ஓட்டிய 15 பேருக்கும், சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டிய 203 பேருக்கும், அதிக எடை ஏற்றி இயக்கிய 98 வாகன ஓட்டுநா்களுக்கும் தணிக்கை அறிக்கை வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai