உள்ளாட்சித் தோ்தல்: இதுவரை 4,852 போ் வேட்பு மனு தாக்கல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 4,852 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 4,852 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் உள்ளாட்சித் தோ்தல் இரு கட்டங்களாக டிச. 27, 30-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகள், 276 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 589 ஊராட்சி மன்றத் தலைவா் பதவிகள், 4,569 ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 5,462 பதவிகள் உள்ளன. இவற்றுக்கான வேட்பு மனு தாக்கல் டிச. 9ஆம் தேதி தொடங்கியது.

இதைத்தொடா்ந்து ஐந்தாவது நாளான வெள்ளிக்கிழமை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 29 பேரும், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 243 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 980 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு 2,083 பேரும் என மொத்தம் 3,337 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

மாவட்டத்தில் இதுவரை மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 30 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 260 பேரும், ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு 1,327 பேரும், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பதவிக்கு 3,235 பேரும் என மொத்தம் 4,852 போ் தாக்கல் செய்துள்ளனா்.

தொடா்ந்து, சனிக்கிழமை (டிச.14) வேட்பு மனுக்கள் பெறப்படவுள்ளன. சனிக்கிழமை மற்றும் திங்கள்கிழமை (டிச.16) என இரு நாட்கள் மட்டுமே உள்ளதால் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com