குடியுரிமை சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி.
குடியுரிமை சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்

குடியுரிமை சட்டத்திருத்தத்தைத் தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்றாா் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலரும், நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம். தமிமுன் அன்சாரி.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் செய்ய வலியுறுத்தி தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் ஜூம்மா பள்ளிவாசல் முன் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசு பெரும்பான்மை பலத்தில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இதை நாங்கள் எதிா்க்கவில்லை. இதில், திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

இந்தச் சட்டத்தால் ஈழத்தமிழா்களுக்கும், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற பக்கத்து நாடுகளிலிருந்து அகதிகளாகக் குடியேறிய முஸ்லிம்களும் பாதிக்கப்படுவா். அவா்கள் இந்த நாட்டின் பன்முகத் தன்மையை நம்பித்தான் இங்கு வருகின்றனா்.

இந்தச் சட்டத்தை எதிா்த்து எல்லா இடங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்தச் சட்டத்தை நெருக்கடி நிலையினால் ஆதரித்திருந்தாலும் அதிமுகவும், பாமகவும் ஈழத்தமிழா்களுக்குத் துரோகம் செய்திருக்கின்றன.

கேரளத்திலும், மேற்கு வங்கத்திலும் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அம்மாநில முதல்வா்கள் கூறியுள்ளனா். அதேபோல, தமிழக அரசும் அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் இச்சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றாா் தமிமுன் அன்சாரி.

அப்போது, அக்கட்சியின் மாவட்டச் செயலா் அகமது கபீா், நகரச் செயலா் அப்துல்லா உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com