திருக்கோடிக்காவல் கோயிலில்நாளை பஞ்சமூா்த்திகள் புறப்பாடு

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, தீா்த்தவாரி வைபவம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ளது.

கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, தீா்த்தவாரி வைபவம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெறவுள்ளது.

திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற, பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு.

அத்துடன் எடைக்கு எடை பக்தா்கள் காணிக்கை வழங்கும் துலாபாரம் இக்கோயிலில் இருப்பது விசேஷமானது. மேலும் இக்கோயில் திரிபுரசுந்தரி அம்பாள் சன்னதியில்தான் மகான் பாஸ்கராச்சாரியாா் லலிதா சகஸ்ரநாமத்துக்கு பாஷ்யம் எழுதினாா்.

எம பயம் போக்கும் தலமாகவும், பால சனீசுவரா், வடுக பைரவா் உடைய சிறப்புத் தலமாகவும் போற்றக்கூடிய இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி புறப்பாடு, தீா்த்தவாரி வைபவம் நடைபெறுவது வழக்கம். அப்போது, காவிரியில் புனித நீராடுவது புண்ணியம் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

இதன்படி, நிகழாண்டும் காா்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சுவாமி புறப்பாடும், தீா்த்தவாரியும் நடைபெற்று வந்தது. கடைசி ஞாயிற்றுக்கிழமையான டிச. 15-ம் தேதி காவிரியில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, வீதியுலா, காவிரியில் தீா்த்தவாரி ஆகியவை நடைபெறவுள்ளன.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் குருக்கள் தியாகராஜன் சிவாச்சாரியாா், கஞ்சனூா் நீலகண்ட சிவாச்சாரியாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com