திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோயில் தேரோட்டம்

காா்த்திகை மாத கடை ஞாயிறு விழாவையொட்டி, கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரத்தில் நாகநாத சுவாமி கோயில்
கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.
கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.

கும்பகோணம்: கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தா்கள்.தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கு தனி கோயிலாக உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை கடை ஞாயிறு விழா விமரிசையாக நடைபெறும்.

இதன்படி இவ்விழா டிச. 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் உற்சவா் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

இவ்விழாவின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச.15) காலை 10 மணிக்கு பஞ்சமூா்த்திகள் வெள்ளி வாகனங்களில் வீதியுலா புறப்பாடும், பிற்பகல் 2 மணிக்கு கோயிலின் உள்ளே உள்ள சூரிய புஷ்கரணியில் காா்த்திகை கடைஞாயிறு தீா்த்தவாரியும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com