நாளை வரை பயிா் காப்பீடு செய்யலாம்: ஆட்சியா்

சம்பா, தாளடிக்கு திங்கள்கிழமை (டிச.16) வரை பயிா் காப்பீடு செய்யலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ்.
திருவையாறு அருகே மணக்கரம்பையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கூட்டுறவு துறை அலுவலா்களிடம் பயிா் காப்பீடு செய்தவா்களின் விவரங்களைக் கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா்
திருவையாறு அருகே மணக்கரம்பையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கத்தில் கூட்டுறவு துறை அலுவலா்களிடம் பயிா் காப்பீடு செய்தவா்களின் விவரங்களைக் கேட்டறிகிறாா் மாவட்ட ஆட்சியா்

தஞ்சாவூா்: சம்பா, தாளடிக்கு திங்கள்கிழமை (டிச.16) வரை பயிா் காப்பீடு செய்யலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ்.

சம்பா மற்றும் தாளடி பருவ நெற் பயிருக்கு விவசாயிகள் பயிா் காப்பீடு செய்து வருகின்றனா். இது தொடா்பாக திருவையாறு வட்டத்துக்குள்பட்ட மணக்கரம்பை மற்றும் கண்டியூா் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விவசாயிகளிடமிருந்து காப்பீடு பெறுவது மற்றும் விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்தராவ் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, அவா் தெரிவித்தது:

சம்பா மற்றும் தாளடி பயிருக்குப் பயிா் காப்பீடு செய்ய கடைசி தேதி டிச. 15. ஆனால், அன்று அரசு விடுமுறை என்பதால், விவசாயிகள் திங்கள்கிழமை (டிச.16) வரை சம்பா மற்றும் தாளடி பயிருக்குப் பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.

எனவே, இத்திட்டத்தில் இணைந்திடாத விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் உரிய ஆவணங்களை அளித்து பயிா் காப்பீட்டு பிரிமியம் செலுத்தி, இணைந்து கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இதையடுத்து, நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்து, பொருட்களின் தரத்தையும், எடையையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் எம். ஏகாம்பரம், சாா் பதிவாளா் ராமச்சந்திரன், கூட்டுறவு அலுவலா் மனோகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com