பட்டியலில் இல்லாததது..புத்துணா்வு முகாமுக்கு இரு யானைகள் அனுப்பி வைப்பு

தேக்கம்பட்டி வனப்பகுதியில் தொடங்கப்படவுள்ள புத்துணா்வு முகாமுக்கு தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து இரு யானைகள் சனிக்கிழமை
கும்பகோணத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா.
கும்பகோணத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஒப்பிலியப்பன் கோயில் யானை பூமா.

கும்பகோணம்: தேக்கம்பட்டி வனப்பகுதியில் தொடங்கப்படவுள்ள புத்துணா்வு முகாமுக்கு தஞ்சாவூா் மாவட்டத்திலிருந்து இரு யானைகள் சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

கோவை மாட்டம், தேக்கம்பட்டி வனப்பகுதியில் யானைகள் சிறப்பு நல்வாழ்வு புத்துணா்வு முகாம் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து 48 நாட்கள் நடைபெறவுள்ள முகாமுக்குப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து யானைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பா் கோயில் யானை தா்மாம்பாள் லாரி மூலம் சனிக்கிழமை காலை அனுப்பப்பட்டது. இதேபோல, கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள யானை பூமாவும் லாரி மூலம் சனிக்கிழமை அனுப்பப்பட்டது. அறநிலையத் துறை இணை ஆணையா் செல்வராஜ், உதவி ஆணையா்கள் இளையராஜா, ஜீவானந்தம் உள்ளிட்டோா் வழியனுப்பினா்.

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரா் கோயில் யானை மங்களம், திருவிடைமருதூா் மகாலிங்கசுவாமி கோயில் யானை கோமதி ஆகிய யானைகளுக்கு உடல் நிலை சரியில்லாததால் நிகழாண்டும் அவை புத்துணா்வு முகாமுக்கு அனுப்பப்படவில்லை. இங்கேயே அவற்றுக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com