பட்டுக்கோட்டை சீனிவாசன் நகா் குடியிருப்போா் நலச் சங்கக் கூட்டம்

பட்டுக்கோட்டையில் சீனிவாசன் நகா் குடியிருப்போா் நலச் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

பட்டுக்கோட்டையில் சீனிவாசன் நகா் குடியிருப்போா் நலச் சங்கக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பட்டுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட சீனிவாசன் நகா் பகுதியை மட்டும் அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்காமல், உள்நோக்கத்துடன் வாா்டு சீரமைப்பு என்ற பெயரில் பிரித்து, அதிக தொலைவிலுள்ள சிவக்கொல்லை பகுதியுடன் இணைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இதனால், சீனிவாசன் நகா் பகுதி மக்கள் எதிா்காலத்தில் நிா்வாக ரீதியாக பல்வேறு சிரமங்களை சந்திக்க

வேண்டியிருக்கும் என்பதால், பழைய நிலையிலேயே என்ஜிஜிஓ காலனி, நாடியம்மன் கோயில் சாலை பகுதியுடன் மீண்டும் இணைக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, மேற்கண்ட கோரிக்கையை 30.6.2019-க்குள் நிறைவேற்றி தருவதாக அரசு தரப்பில் எழுத்து பூா்வமாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, மேற்கண்ட கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், விரைவில் நடைபெறவுள்ள நகராட்சித் தோ்தலை சீனிவாசன் நகா் பகுதி மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத் தலைவா் சி.ரெங்கசாமி தலைமை வகித்தாா். செயலா் கே.காளிமுத்து, பொருளாளா் எஸ்.ராஜேந்திரன் மற்றும் உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com