சுடச்சுட

  

  பட்டுக்கோட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் 

  By DIN  |   Published on : 12th February 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை  நடைபெற்றது.
  இதில்,  பிப்ரவரி 16ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடைபெறவுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில மாநாட்டில் அனைத்து மதத்தவர்கள் ஒருதாய் மக்களாக, அண்ணன் தம்பிகளாக வாழ வேண்டும் என்ற கருத்து முன்னிறுத்தப்படுகிறது. எனவே, இந்த மாநாட்டில் தவறாமல் கலந்து கொள்ள  வேண்டும் என அனைத்து சமுதாய மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
  கூட்டத்துக்கு தஞ்சாவூர் தெற்கு மாவட்டப் பொருளாளர் மதுக்கூர் அப்துல்காதர் 
  தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை பெரிய பள்ளிவாசல் இமாம் அயூப்கான் கிராத் ஓதி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  கட்சியின் மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.பி. நசுருதீன், தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் ஜெய்னுல் ஆபீதீன், அதிரை பேரூர் தலைவர் கே.கே. ஹாஜா நஜ்முதீன், செயலாளர் வழக்குரைஞர் ஏ.முனாப் உள்ளிட்டோர் பேசினர்.  
  தஞ்சாவூர், அதிராம்பட்டினம், மதுக்கூர், செந்தலைப்பட்டினம், ஆவணம், சம்பைப்பட்டினம், வண்ணாரப்பேட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai