சுடச்சுட

  

  பட்டுக்கோட்டையில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின்  வட்டக்கிளைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
  கூட்டத்துக்கு சங்கத் தலைவர் என்.சந்தானகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலர் டி.மோகன்தாஸ், இணைச் செயலர் கே.பொன்முடி, பொருளாளர் ஆர்.சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விடுபட்ட சங்க உறுப்பினர்களுக்கு அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்.பொதுமக்கள் நலன் கருதி பட்டுக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. நிறைவில்,  செயற்குழு உறுப்பினர் எம். தனபதி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai