சுடச்சுட

  

  கும்பகோணத்தில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கோட்டச் செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் பிப். 14-ம் தேதி நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து அக்கழகத்தின் கும்பகோணம் செயற் பொறியாளர் மு. நளினி தெரிவித்திருப்பது: கும்பகோணம் கோட்டச் செயற் பொறியாளர் அலுவலகத்தில் பிப். 14-ம் தேதி பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
  தஞ்சாவூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.நா. சங்கரன் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் கும்பகோணம் நகரம், கும்பகோணம் புறநகர், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருகாவூர், கணபதி அக்ரஹாரம் பிரிவு அலுவலகப் பகுதியைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai