மனிதநேய மக்கள் கட்சியின் 11-வது ஆண்டு தொடக்க விழா
By DIN | Published On : 12th February 2019 08:56 AM | Last Updated : 12th February 2019 08:56 AM | அ+அ அ- |

அதிராம்பட்டினத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் 11-வது ஆண்டு தொடக்க விழா அக்கட்சியினரால் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி அதிரை கடைத்தெருவிலுள்ள கட்சி அலுவலகம், பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, தக்வா பள்ளிவாசல், சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, ஷிபா மருத்துவமனை, பிலால் நகர், கல்லூரி முக்கம் உள்பட 12 இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் அதிரை பேரூர் தலைவர் எம்.சாகுல் ஹமீது தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை எஸ். அகமது ஹாஜா, அதிரை பேரூர் செயலர் எஸ்.ஏ. இத்ரீஸ் அகமது மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிரை பேரூர் மமக பொருளாளர் முகமது யூசுப் நன்றி கூறினார்.