சுடச்சுட

  

  விவசாய இயந்திரத்தில் சிக்கி விவசாயியின் கை துண்டானது

  By DIN  |   Published on : 12th February 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒரத்தநாடு அருகே தெக்கூர்  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி. இவரது விவசாய நிலத்தில் கதிர் அறுவடை செய்ய தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் திங்கள்கிழமை கதிர் அறுக்கும் இயந்திரம் மூலம் கதிர் அறுத்து கொண்டிருந்தார்.
  அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரம் பழுதானதால், அதை சரிசெய்தபோது பிரபாகரனின் வலதுகை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.  இதையடுத்து, பிரபாகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai