விவசாயிகளுக்கான அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
By DIN | Published On : 12th February 2019 08:54 AM | Last Updated : 12th February 2019 08:54 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான அறிவியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றது.
இக்கருத்தரங்கத்தைக் கல்லூரி முதல்வர் ஆர். வெங்கடாஜலம் தொடங்கி வைத்தார். வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல், தொழில்நுட்ப நிலையத்தின் ஆய்வுத் துறைத் தலைவர் குமரன், பேராசிரியர்கள் நந்தகுமார், சுரேஷ், இயற்பியல் துறை ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், வேதியியல் துறைத் தலைவர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் பி. நடராஜன், தாவரவியல் துறைப் பேராசிரியர் எஸ். விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.