சுடச்சுட

  

  தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் கீழடி அகழாய்வு குறித்த நிழற்பட கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை (பிப்.14) வரை நடைபெறவுள்ளது.
  இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர் த. தங்கதுரை தெரிவித்திருப்பது: இந்தியா - ஜப்பான் பன்னாட்டு கருத்தரங்கத்தையொட்டி, கீழடி அகழாய்வு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பார் ஹாலில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை சார்பில் நிழற்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
  இதில் கீழடி, அழகன்குளம், பட்டறைபெரும்புதூர் பகுதிகளில் அகழாய்வு செய்த தொல்பொருள்களை நிழற்படங்களாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் இலவசமாக (கட்டணம் இல்லாமல்) பார்வையிடலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai