சுடச்சுட

  

  "தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த மாநகராட்சி அலுவலக வளாகம், புதிய அலுவலகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. 
  இந்த மண்டபத்தில் நிர்வாக அலுவலகம், பொறியியல் பிரிவு அலுவலகம், தணிக்கை பிரிவு அலுவலகம் ஆகியவையும், கீழவாசலில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபக் கட்டடத்தில் நகரமைப்புப் பிரிவு, வருவாய் பிரிவு, நகர் நலப் பிரிவு உள்ளிட்டவையும் இயங்கி வருகின்றன. பொதுமக்களின் வசதி கருதி பழைய அலுவலகக் கட்டடத்தில் தகவல் மையம், வரி வசூல் மையம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதிய கட்டடம் கட்டும் இடத்தில் இடையூறாக உள்ள பழைய தகவல் மையக் கட்டடம் அகற்றப்படவுள்ளது. 
  எனவே, பழைய மாநகராட்சி அலுவலகத்தில் செயல்பட்டு வந்த பொதுமக்கள் தகவல் மையம், கணினி வரி வசூல் மையம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்துக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  பொதுமக்கள் இனிமேல் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறவும், வரி மற்றும் வரியில்லா இனங்கள் செலுத்தவும், அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் கோரிக்கை மனு அளிக்கவும் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி அலுவலகக் கட்டடத்தில் செயல்படும் கணினி வரி வசூல் மையம், தகவல் மையத்தைப் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.' என்று மாநகராட்சி ஆணையர் (பொ) ப. காளிமுத்து தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai