பெண்கள் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

ஒரத்தநாடு பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் ஆங்கில முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும் சரோஜினி நாயுடு

ஒரத்தநாடு பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் ஆங்கில முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும் சரோஜினி நாயுடு ஆங்கில இலக்கிய மன்றம்  இணைந்து நடத்திய இரண்டு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. 
கருத்தரங்கில், வளர்ந்து வரும் ஆங்கில இலக்கிய ஆய்வுகளின் போக்குகள்  என்ற தலைப்பில் பிப்ரவரி 11, 12 ஆகிய தினங்களில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளுக்கு கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் பிரேமாவதி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு  செய்தார்.  முதல் நாள் கருத்தரங்கின் தொடக்க உரையை  புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ராஜராஜன் வழங்கினார்.  அவரை தொடர்ந்து, இலங்கை ஜாப்னா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் கருணாகரன் பேசினார். 2ஆம் நாள் கருத்தரங்கில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கல்லூரியின் இணைப் பேராசிரியர்  மாறன்,  தஞ்சை சரபோஜி கல்லூரியின் துணைப் பேராசிரியர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com