அரசுப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
By DIN | Published On : 14th February 2019 08:45 AM | Last Updated : 14th February 2019 08:45 AM | அ+அ அ- |

பாபநாசம் வட்டம், புள்ளபூதங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் மாணவர்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். பெற்றோர்ஆசிரியர் கழக தலைவர் முருகன், பள்ளி வளர்ச்சி குழுத் தலைவர் கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பாபநாசம் மாவட்ட உ ரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவரும் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுத் தலைவருமான நீதிபதி எஸ். ராஜசேகர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கான இலவச சட்ட உதவிகள் பற்றி விளக்கி பேசினார்.
இதில் வழக்குரைஞர் இளையராஜா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தன்னார்வலர்கள் எஸ்.பி. ராஜேந்திரன், எஸ். தனசேகரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.