கும்பகோணத்தில் 63 நாயன்மார்கள் வீதியுலா

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் சுவாமி கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் வீதியுலா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் சுவாமி கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, 63 நாயன்மார்கள் வீதியுலா நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா கொடியேற்றத்துடன் பிப். 10-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், புதன்கிழமை காலை வெள்ளிப் பல்லக்கில் விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர், கோயிலில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர்,மூர்த்தி நாயனார், மூர்க்க நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தனித்தனி படிச்சட்டங்களில் நாயன்மார்களின் உற்சவர்கள் ஆதிகும்பேசுவரர், சாரங்கபாணி கோயில் வீதிகளில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
மேலும், சுவாமி, அம்பாளும் மங்கள இசை முழங்க வீதியுலா நடைபெற்றது. 
இதில், திருக்குடந்தை சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் நடராஜன் தலைமையில் பக்தர்கள் தேவார திருமுறைகள் பாடி சென்றனர்.
இரவு பஞ்சமூர்த்தி சுவாமிகள் யானை அம்பாரியில் வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவில் பிப். 19-ம் தேதி மகாமகக் குளத்தில் மாசி மக தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com