முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. சாவு
By DIN | Published On : 28th February 2019 10:49 AM | Last Updated : 28th February 2019 10:49 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில் இரண்டாம் தெருவில் வசித்து வந்தவர் ராஜேந்திரன்(62). ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர்.
இவர் புதன்கிழமை காலை தஞ்சாவூர்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே புறவழிச்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராஜேந்திரன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அம்மாபேட்டை போலீஸார், ராஜேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
புகாரின்பேரில், அம்மாபேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.