முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
கல்வி உதவித்தொகை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 28th February 2019 10:46 AM | Last Updated : 28th February 2019 10:46 AM | அ+அ அ- |

கல்வி உதவித்தொகை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி முன் இந்திய மாணவர் சங்கத்தினர் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நிகழ் கல்வியாண்டு ஆண்டு பருவம் நிறைவு பெற உள்ள நிலையில், இதுவரை எஸ்.சி., எஸ்.டி. மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதுநாள் வரை கல்வி உதவித்தொகை வழங்காத தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலர் ஜி. அரவிந்தசாமி தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் வகுப்புகளைப் புறக்கணித்து சென்றனர்.