முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பாபநாசத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு
By DIN | Published On : 28th February 2019 10:46 AM | Last Updated : 28th February 2019 10:46 AM | அ+அ அ- |

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்திலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாபநாசத்திற்கு புதன்கிழமை வந்த பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திருக்குறளின் சிறப்புகள் பற்றி விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் உதவியாளர் நாகராஜன், பாபநாசம் உலக திருக்குறள் மைய செயலாளர் கு.ப.செயராமன், துணைத் தலைவர்குருசாமி, செயற்குழு உறுப்பினர் செங்கதிர் செல்வன், பாபநாசம் வாய்மை அறக்கட்டளை நிறுவனர் உமாபதி, பாபநாசம் திராவிடர் சமுதாய கல்வி அறக்கட்டளை தலைமை செயலாளர் திருஞானசம்பந்தம் மற்றும் கைலாசம், கணேசன் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.