முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
பாலீஷ் போட்டு தருவதாக கூறி எட்டரை பவுன் நகை திருட்டு
By DIN | Published On : 28th February 2019 10:47 AM | Last Updated : 28th February 2019 10:47 AM | அ+அ அ- |

பாபநாசம் அருகே அய்யம்பேட்டை இரட்டை தெருவைச் சேர்ந்த கணபதி மனைவி கமலா (71). இவர்களின் மகள் லெட்சுமி (54). மாற்றுத் திறனாளி. தாயும், மகளும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நகைகளை பாலீஷ் செய்து தருவதாக கூறி, கமலாவிடமும்,
லட்சுமியிடமும் கூறினார்களாம்.
இதை நம்பி தாயும், மகளும் தங்கள் நகைகளை அந்த நபர்களிடம் கொடுத்தார்களாம். அவர்கள் இருவரும் தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தில் நகைகளை போட்டு பாலீஷ் போடுவதுபோல் நடித்ததாகவும், பின்னர் பாத்திரத்தில் உள்ள நகைகளை எடுத்து கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்களாம்.
பாத்திரத்தை பார்த்தபோது, அதில் நகைகள் இல்லையாம். இதுகுறித்து
கமலா செவ்வாய்க்கிழமை அளித்த புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து தாய், மகளிடம் எட்டரை பவுன் நகைகளை திருடி சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.