முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்
2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து
By DIN | Published On : 28th February 2019 10:46 AM | Last Updated : 28th February 2019 10:46 AM | அ+அ அ- |

நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தாத 2 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தமிழ்நாட்டில் நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகத் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் 41 நுண்ணீர் பாசன நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் எவர்கிரீன் இரிகேசன், பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட்"ஆகிய இரு நுண்ணீர் பாசன நிறுவனங்களும் நுண்ணீர் பாசனம் அமைப்பதற்கு எவ்வித பணிகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே, அந்நிறுவனங்களுக்குக் குறிப்பிடும்படி முன்னேற்றம் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், அந்நிறுவனங்கள் நுண்ணீர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காத காரணத்தால், மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் அனுமதியுடன் அந்நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் அளிக்கப்பட்ட
அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே, நுண்ணீர் பாசனத் திட்டத்தின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் யாரும் "எவர்கிரீன் இரிகேசன், பூர்மா பிளாஸ்ட் பிரைவேட் லிமிடெட்" ஆகிய நிறுவனங்களை அணுக
வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.