ஆங்கிலப் புத்தாண்டு: பெரிய கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தஞ்சாவூர் பெரியகோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதில் பெருவுடையார், பெரியநாயகிக்கு பால், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் பெருவுடையார், பெரியநாயகிக்கு பால், மஞ்சள், திரவியப்பொடி உள்ளிட்ட 10 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், ஏராளமான வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், புன்னைநல்லூர் மாரியம்மன் வெள்ளி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தஞ்சாவூர் மேல வீதி கொங்கனேசுவரர் கோயில், சங்கரநாராயண பெருமாள் கோயில், மேலவெளி சாய்பாபா கோயில், வடவாறு ராகவேந்திர சுவாமி கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com