Enable Javscript for better performance
மரத்தில் வாகனம் மோதியதில்  இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மரத்தில் வாகனம் மோதியதில்  இளைஞர் சாவு

    By DIN  |   Published on : 08th January 2019 08:34 AM  |   அ+அ அ-   |    |  

    பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு மரத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
    அய்யம்பேட்டை காவல் சரகம், புரசக்குடி கிராமம், குடியானத் தெருவை சேர்ந்த சேகர் மகன் சரவணன்(28). கூலி தொழிலாளியான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சூலமங்கலம் சாலையில்  வந்தபோது,  எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் சரவணனின் வாகனம் மோதியதாக தெரிகிறது. இதில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த சரவணன் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற அய்யம்பேட்டை போலீஸார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp