சுடச்சுட

    

    கும்பகோணம் மண்டலத்தில் 6 புதிய பேருந்துகள் இயக்கம் தொடக்கம்

    By DIN  |   Published on : 12th January 2019 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தின் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    இதுகுறித்து அமைச்சர் தெரிவித்தது:
    தமிழக முதல்வர் ஜன. 7-ம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 555 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்துக்கான 6 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 
    புதிய பேருந்துகள் பேராவூரணி - நாகை, தஞ்சாவூர் - புதுச்சேரி, தஞ்சாவூர் - திருச்செந்தூர், பேராவூரணி -கும்பகோணம், ஒரத்தநாடு - திருப்பூர், ஒரத்தநாடு - கோவை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன என்றார் அவர். 
    இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இருவருக்கு பணி நியமன ஆணையையும், 4 பேருக்கு நிவாரண உதவித்தொகையும் அமைச்சர் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai