சுடச்சுட

  

  தஞ்சாவூர் ரயிலடியில் வெள்ளிக்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்ட  உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கலவரத்தைத் தூண்டி வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் பாஜகவின் 
  சட்ட விரோத,  ஜனநாயக விரோத செயல்பாடுகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாநகரச் செயலர் ந. குருசாமி தலைமை வகித்தார். 
  மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே. 
  பொன்னுத்தாய் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி. செந்தில்குமார், செயலர் என்.வி. கண்ணன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் கே. பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai