கும்பகோணம் மண்டலத்தில் 6 புதிய பேருந்துகள் இயக்கம் தொடக்கம்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தின்

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்தின் 6 புதிய பேருந்துகள் இயக்கத்தை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து அமைச்சர் தெரிவித்தது:
தமிழக முதல்வர் ஜன. 7-ம் தேதி சென்னையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு 555 புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலத்துக்கான 6 புதிய பேருந்துகளின் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 
புதிய பேருந்துகள் பேராவூரணி - நாகை, தஞ்சாவூர் - புதுச்சேரி, தஞ்சாவூர் - திருச்செந்தூர், பேராவூரணி -கும்பகோணம், ஒரத்தநாடு - திருப்பூர், ஒரத்தநாடு - கோவை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படவுள்ளன என்றார் அவர். 
இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம், ஆட்சியர் ஆ. அண்ணாதுரை, மக்களவை உறுப்பினர்கள் கு. பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து, தஞ்சாவூர் சுற்றுலா மாளிகையில் இருவருக்கு பணி நியமன ஆணையையும், 4 பேருக்கு நிவாரண உதவித்தொகையும் அமைச்சர் வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com