பாவை ஒப்பித்தல் போட்டி:  வெற்றிப் பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் வெள்ளிக்கிழமை

சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச ராமானுஜன் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பாவை,  திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இம்மையத்தில் வெள்ளிக்கிழமை திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில், கும்பகோணம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையிலான 15 பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் ஆடுதுறை ஸ்ரீ கே.ஜி.எஸ். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி எம். காயத்ரி முதல் பரிசான ரூ. 3,000-ஐ பெற்றார். சோழபுரம் ஜெயம் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி எல். மகதி இரண்டாம் பரிசாக ரூ. 2000-யும், ஸ்ரீசரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவி வி. மீனாட்சி மூன்றாம் பரிசாக ரூ. 1,000-யும் பெற்றனர். போட்டியில் கலந்து கொண்டு அனைத்து பாசுரங்களையும் ஒப்பித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 500 வழங்கப்பட்டது. மேலும் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் ஸ்ரீமத் நாராயணீயம் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
எஸ்.எம். மாரிமுத்து ஓதுவார் நடுவராகச் செயல்பட்டு பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து சிறப்புரையாற்றினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீனிவாச இராமானுஜன் மையப் புலத்தலைவர் வி. ராமசாமி பரிசுகளை வழங்கினார். 
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தலைவர் ஆர். சேதுராமன், துணைவேந்தர் எஸ். வைத்யசுப்ரமண்யத்தின் வழிகாட்டுதலின்படி மையப் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com