சுடச்சுட

  

  தென்னை விவசாயிகளுக்கு ரூ.305 கோடி நிவாரணம் அளிப்பு: ஆட்சியர் தகவல்

  By DIN  |   Published on : 13th January 2019 03:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இதுவரையில் ரூ.305.09 கோடி இழப்பீட்டு நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:
  தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகைக்காக ரூ. 495.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
  இதில், மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 31 கிராமங்களைச் சேர்ந்த 
  642 தென்னை விவசாயிகளுக்கு ரூ.89.26 லட்சமும், திருவையாறு வட்டத்தில் 4 கிராமங்களில் உள்ள 20 தென்னை விவசாயிகளுக்கு ரூ.55 ஆயிரமும், ஒரத்தநாடு வட்டத்தில் 117 கிராமங்களில் உள்ள 9,852 தென்னை விவசாயிகளுக்கு ரூ.69.03 கோடியும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 175 கிராமங்களில் உள்ள 23,603 தென்னை விவசாயிகளுக்கு ரூ.189.59 கோடியும், பேராவூரணி வட்டத்தில் 90 கிராமங்களில் உள்ள 7986 தென்னை விவசாயிகளுக்கு ரூ. 45.42 கோடியும், பாபநாசம் வட்டத்தில் 50 கிராமங்களில் உள்ள 316 தென்னை விவசாயிகளுக்கு ரூ.12.63 லட்சமும், கும்பகோணம் வட்டத்தில் 11 கிராமங்களில் உள்ள 43 தென்னை விவசாயிகளுக்கு ரூ.12.63 லட்சம் ஆக மொத்தம் இதுவரை 478 கிராமங்களில் 42,467 தென்னை விவசாயிகளுக்கு ரூ.305.09 கோடி இழப்பீட்டு நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai