சுடச்சுட

    

    ரோட்டரி சங்கம் சார்பில் அதிராம்பட்டினத்தில் துப்புரவு  பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

    By DIN  |   Published on : 13th January 2019 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், இங்குள்ள பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எம்.கே.சம்சுதீன் தலைமை வகித்தார். செயலாளர் இசட். அகமது மன்சூர், பொருளாளர் எஸ். சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கஜா புயலின் போது துப்புரவுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட அதிரை பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் 85 பேருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி தலா ரூ.500 மதிப்புள்ள அரிசி, கரும்பு, கைலி, போர்வை, பாய், டவல், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்கள் கொண்ட பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது.
    அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம். நடராஜன், கே.வைரவன், எம்.முகமது தமீம், டி. முகமது நவாஸ்கான், கண்ணன் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai