சுடச்சுட

  


  கும்பகோணத்தில் வரி செலுத்தப்படாமல் இயக்கப்பட்ட ஆம்னி பேருந்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சனிக்கிழமை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் மற்றும் மினி வாகனங்கள் உரிய அனுமதியில்லாமல் இயக்கப்படுவதாக கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலத்துக்குத் தகவல் வந்தது. இதன்பேரில், கும்பகோணம் அருகே தாராசுரம் புறவழிச்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்டோர் சனிக்கிழமை வாகனச் சோதனை நடத்தினர். அப்போது, சென்னையிலிருந்து தஞ்சாவூருக்குப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சாலை வரி செலுத்தாமல் வந்த வெளிமாநில ஆம்னி பேருந்தைப் பறிமுதல் செய்து, மேல் நடவடிக்கைக்காக கும்பகோணம் தாலுக்கா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
  தொடர்ந்து இணக்க மற்றும் சாலை வரிகளைச் செலுத்தாமல் இயக்கப்பட்ட 4 மினி டோர் வாகனங்களையும் அலுவலர்கள் பறிமுதல் செய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினர். இதுதொடர்பாக ரூ. 55,000 அபராதம் விதித்தனர்.
  மேலும், அதிக சப்தம் எழுப்பிய 25-க்கும் அதிகமான அரசு, தனியார் பேருந்துகளின் காற்றொலிப்பான்களும் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai