கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் தொடக்க விழா

தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது. 


தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் அண்மையில் தொடங்கப்பட்டது. 
தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மேஜர். ஆர். வெங்கடாசலம் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மதுரைக் கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் பேராசிரியர் எஸ். தினகரன் பேசும்போது, நெகிழியின் மூலம் ஏற்படும் தீமைகள், மரங்களின் இன்றியமையாமை, புவிக்கும் உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு, தற்கால சூழல் மாற்றம், அதனால் மனிதன் மனதில் ஏற்படும் வாழ்வியல் மாற்றத்தையும் பற்றி விளக்கி கூறினார். 
சுற்றுச்சூழலைக் காப்பதில் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்குமான பங்களிப்பு குறித்து கல்லூரி அறிவியல் புலத்தலைவர் பேராசிரியர் வி.எஸ். நாகரத்தினம் விளக்கி பேசினார். முன்நதாக, விலங்கியல் துறை பேராசிரியரும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளருமான பா. காளீஸ்வரன் வரவேற்றார். நிறைவில், விலங்கியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். எஸ். தமிழ்வாணன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com