பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: ஆட்சியர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுவதை ஆட்சியர்


தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாபநாசம் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுவதை ஆட்சியர் ஆ. அண்ணாதுரை சனிக்கிழமை பார்வையிட்டார்.
பாபநாசம் வட்டம், சரபோஜிராஜபுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை, கும்பகோணம் வட்டம், தாராசுரம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை, சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை நியாய விலைக் கடை, பந்தநல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை, கதிராமங்கலம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடை, திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடை ஆகியவற்றில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருவதை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி வழங்கப்படுகிறதா எனவும், தரமாக உள்ளதா என்றும் அங்கு வந்த பொதுமக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்து, கடையில் பொருள்களின் இருப்பளவு குறித்து ஆய்வு செய்தார். 
இதைத்தொடர்ந்து, திருவிடைமருதூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடைக்கு லாரிகள் மூலம் வரப்பெற்ற அத்தியாவசியப் பொருட்கள் இறக்கப்பட்டு இருப்பு வைக்கப்படுவதைப் பார்வையிட்டார். அப்போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மொ. ஏகாம்பரம், கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் அழகர்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com