மக்களவை முன்னாள்  உறுப்பினர் கே.கிருஷ்ணமூர்த்தி  காலமானார்    

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த  மக்களவை முன்னாள் உறுப்பினர்  கே. கிருஷ்ணமூர்த்தி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த  மக்களவை முன்னாள் உறுப்பினர்  கே. கிருஷ்ணமூர்த்தி (77) உடல்நலக்குறைவால்  புதன்கிழமை (ஜன.16) காலமானார்.
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். படித்து வழக்குரைஞராகப் பணியாற்றினார். 
இவர் கடந்த  1984 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியிலும்,  1998 ஆம் ஆண்டில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியிலும்  போட்டியிட்டு  வெற்றி பெற்றவர்.
புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில்  வீட்டில் இருந்தபோது கிருஷ்ணமூர்த்திக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். இவருக்கு மனைவி மல்லிகா, 2 மகள்கள் உள்ளனர்.
இவரது இறுதி ஊர்வலம்  வெள்ளிக்கிழமை (ஜன.18) காலை 10 மணியளவில் அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com