காணும் பொங்கல் விழா: பூங்கா, கோயில்களில் திரண்ட மக்கள்

காணும் பொங்கல் விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பூங்கா, கோயில்களில் வியாழக்கிழமை ஏராளமான மக்கள் குடும்பத்துடன் திரண்டனர்.

காணும் பொங்கல் விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பூங்கா, கோயில்களில் வியாழக்கிழமை ஏராளமான மக்கள் குடும்பத்துடன் திரண்டனர்.
பொங்கல் பண்டிகையின் மூன்றாவது நாள் காணும் பொங்கல் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சமையல் செய்த உணவு, பலகாரங்களை எடுத்துக் கொண்டு உறவினர்களுடன் பூங்கா, கோயில்களுக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். இதனால், தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா, பெரியகோயில், கல்லணை, கும்பகோணம் தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில், அணைக்கரை உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

தாராசுரம் கோயிலில்  குவிந்த பொதுமக்கள்
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை பெண்கள் குடும்பத்துடன் காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர். 
தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் வளாகத்தில் குழந்தைகள் தங்களது பெற்றோருடன் சென்று காணும் பொங்கலை மகிழ்ச்சியுடன்  கொண்டாடினர். வெளிநாட்டிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் இந்த விழாவை கண்டுகளித்தனர். 
கும்பகோணம் அருகே தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குள்பட்ட தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. யுனெஸ்கோவால் உலகின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட இக்கோயிலில் உள்ள  கலை நயமிக்க கற்சிற்பங்கள் மற்றும் கட்டடக் கலைகளை பார்க்க வெளிநாட்டிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்,  காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு வியாழக்கிழமை  மாலை இங்கு சிறுவர், சிறுமியர் மற்றும் குழந்தைகளுடன் பெண்கள், முதியவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பெண்கள் கூட்டம் கூட்டமாக தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com